எய்ம்ஸ் மருத்துவமனை : ஜூலை 31 - க்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 4475

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற 31 ஆம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தமிழக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை - தோப் பூரில் 224 ஏக்கர் பரப்பளவில் ஜப்பானின் JIICA நிறுவன நிதியுதவியுடன் உருவாகும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் தலைமையில் ராதாகிருஷ்ணன்ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, தோப்பூர் பகுதியில் இயங்கும் அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன்கூடிய தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அமைவிடத்தை, அமைச்சர் ஆர்.பி. உதய குமாரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments