இந்து அறநிலையத்துறை சார்பில் 'திருக்கோயில்' தொலைக்காட்சி தொடக்கம்

0 6667

திருக்கோயில் தொலைக்காட்சிக்காக வீடியோ ஆவணப்படங்கள், திருக்கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

சமயக் கொள்கைகளைப் பரப்பத் திருக்கோயில் எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒளிபரப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுச் சில திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் பெறப்பட்டுள்ளன.

திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்ப அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு திருக்கோயிலிலும் நடைபெறும் புகழ்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் 4K Resolution Camera உள்ள வீடியோகிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments