முன்விரோதம் காரணமாக கூலிப்படையை அனுப்பி கொடூரத் தாக்குதல் : காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி
புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவர் ஒருவர் கூலிப் படையை அனுப்பி, கொடூரமாக அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது.
கணபதி செட்டிக்குளம் பகுதியைச்சேர்ந்த மருத்துவர் குமாருக்கும், அதேபகுதியைச்சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கும் இடையே கொடுக்கல் - வாங் கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி இரவு வீடு புகுந்து ஜபருல்லா மீது கூலிப்படையினர், கொடூரத் தாக்கு தலை அரங்கேற்றினர்.
இந்த தாக்குதலில், ஜபருல்லா படுகாயம் அடைந்தார். நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த வீடியோ காட்சியை கைப்பற்றிய காலாப்பட்டு போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் குமார், கூலிப்படையைச் சேர்ந்த கோபி, நரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Comments