சீனாவில் பரவும் ’பிளேக் நோய்’ சிகிச்சை அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணம்-WHO

0 19012

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள பேயன்னூர் (Bayannur) நகரில் எலிகள் மூலம் பரவும் பூபானிக் பிளேக் நோய் (bubonic plague) இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

27வயதான நபர் ஒருவருக்கும் அவரது 17 வயதான சகோதரருக்கும் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் மர்மோட் எனப்படும் பெரியரக அணில் அல்லது எலி போன்ற விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டதால் இந்த நோய்க்கு ஆளானதாகவும், மக்கள் யாரும் மர்மோட் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறியுள்ளது.

விலங்குகளிடம் இருந்து பரவும் இந்த பூபானிக் பிளேக் நோய், அவற்றை கடிக்கும் சிறு பூச்சிகள் வாயிலாக மனிதர்களுக்கும் பரவக்கூடியது.

நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் யெர்சினியா என்ற பாக்டீரியா மூலம் இது பரவும்.  உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணம் நிகழும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments