செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

0 878

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னை புறநகர் மாவட்டமான செங்கல்பட்டில் நாளுக்குள் நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தமாக 6 ஆயிரத்து 824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3ஆயிரத்து 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 120 ஆக உயர்ந்துள்ளது. 3ஆயிரத்து 259 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட 191 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவவர்கள் மற்றும் அறிகுறிகள் இருந்து தாமாக முன் வந்து பரிசோதனை செய்துகொண்டவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments