நாய் மீது பைக் ஏறியதால் தவறி விழுந்த உதவி ஆய்வாளர் மரணம் - வெளியான சிசிடிவி காட்சிகள்

0 26688

சேலத்தில் நடுச்சாலையில் படுத்திருந்த நாய் மீது இருசக்கர வாகனம் ஏறியதால் கீழே விழுந்து உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சக்திவேல் கடந்த வாரம் மாசிநாயக்கன்பட்டி தற்காலிக சோதனை சாவடியில் பணி முடிந்து, நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற போது, சாலையில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் படுத்திருந்தன.

இதனை கவனிக்காமல் சாலையில் படுத்திருந்த நாய் ஒன்றின் மீது சக்திவேலின் இருசக்கர வாகனம் ஏறியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைக்கவசம் எடுத்து சென்றுள்ளார். ஆனால் தலையில் அவர் அணியவில்லை. தலைக்கவசத்தை அவர் இரண்டு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் வைத்திருந்துள்ளார். தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர் உயிர் தப்பி இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments