ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 1593

ரிசர்வ் வங்கியின், கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறி கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கித் தவணையைச் செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் முனைப்புக் காட்டாமல், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற தமிழக அரசு முனைப்பு காட்டுவதாகவும் திமுக தலைவர் புகார் கூறியுள்ளார். இதற்காக, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments