சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 27 பேர் பலி

0 1173

சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், அரசு ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் தலா 6 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதே போல் ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 27 பேரும் ஏற்கனவே மூச்சு திணறல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments