முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா

0 6258

அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியை கொரோனா தொற்று பாதித்ததையடுத்து, போரூரிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கும் தொற்று பாதித்து சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோவை மேற்கு தொகுதி அ.தி.மு.க  எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின், குடும்பத்தை சேர்நந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியையும் கொரோனா தொற்று தாக்கியுள்ளது. இதையடுத்து, போரூர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனார். தற்போது, அ.தி.மு.க கலை இலக்கிய பிரிவு செயலாளராக பா. வளர்மதி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments