அரியலூர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி-முதலமைச்சர் நாளை அடிக்கல்

0 1878

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக  அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்காக 3 ஆயிரத்து 575 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ள நிலையில், மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் வழங்குகிறது.இதுவரை 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் தெற்கு கிராம பகுதியில் 10.83 ஹெக்டேர் நிலப்பரப்பில், 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார். அரியலூர் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தமிழகத்திற்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments