இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்றம்..!

0 723

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் இறுதி வாரத்தில் இருந்து முழு ஊரடங்கு கடைப்பிடித்ததால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. கடந்த ஒரு மாதக்காலத்தில் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

இன்று தொடக்கத்திலேயே பங்குச்சந்தை வணிகம் ஏற்றம் கண்டது. பகல் 9.50 மணிக்கு மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 405 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 125 புள்ளிகள் உயர்ந்து பத்தாயிரத்து 733 ஆக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3 விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments