உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது

0 925
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது.

திங்கள் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 425 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 433 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர், குணமடைந்தோர் போக 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் தற்போதைய நோயாளிகள் என மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 5 வரை மொத்தம் 99 லட்சத்து 69 ஆயிரத்து 662 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 5 அன்று மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 596 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments