ஒட்டுமொத்தமாக ரெம்டிசிவிர் மருந்துகளை வாங்கி குவிக்கும் அமெரிக்கா

0 5299
ஹாட்-ஸ்பாட் பகுதிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ரெம்டிசிவிர்

அமெரிக்காவில் கொரோனா ஹாட்-ஸ்பாட் பகுதிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து அதிகளவில் அனுப்பப்பட்டு வருவதாக, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், கொரோனாவிற்கு என தனிப்பட்ட மருந்து இல்லாத நிலையில், நோய்த்தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டிசிவிர் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவிய சூழல் தற்போது அமெரிக்காவில் இல்லை எனவும், அதற்கு ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளுக்கு நன்றி எனவும் கூறினார்.

இதனிடையே, உலக அளவில் ரெமெடிசிவிருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அம்மருந்து தயாரிக்கும் Gilead's நிறுவனத்திடமிருந்து அடுத்த 3 மாதத்திற்கான மொத்த தயாரிப்புகளையும் அமெரிக்காவே வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments