வெடிக்கும் சூழலில் கொரோனா..! கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை

0 3526
திருவனந்தபுரம் மாவட்ட எல்லையில் இன்று முதல் டிரிபிள் லாக்டவுன்

திருவனந்தபுரத்தில் கொரோனா அச்சுறுத்தல், வெடிக்க தயாராக உள்ள எரிமலையின் மீது அமர்ந்துள்ள சூழலில் உள்ளதாக, கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், கொரோனா சமூக பரவலாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் குறைக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அதிக அளவில் ஆண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

இதுவரை, திருவனந்தபுரத்தில்  109 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக 256 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments