சென்னை மண்டலத்திற்குள் வாகனங்களில் செல்ல இபாஸ் தேவையில்லை

0 53793
அனைத்து வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்குத் தடையில்லை

இன்று முதல் சென்னை மண்டலத்திற்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை என்று மாநகர போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தனியார் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். 

பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிய அனுமதியில்லை என்றும் அத்தியாவசிய சேவைகள் பணிக்கு மட்டும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், சரக்கு வாகனங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments