மதுரை புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்கா பதவி ஏற்பு

மதுரை மாநகர புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்கா பதவி ஏற்று கொண்டார்.
கடந்த வாரம் சென்னை, மதுரை, திருச்சி காவல் ஆணையாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் மதுரையின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பிரேம் ஆனந்த் சின்கா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கவும், விசாரணைக்கு வருபவர்களை தேவையின்றி தவறான வார்த்தைகளால் பேசவோ, அடிக்ககூடாது என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.
Comments