கத்தாரில் சிக்கித் தவித்த 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு..!

0 3382

கொரோனா பயணத் தடைகளால் கத்தாரில் சிக்கித் தவித்த 300 க்கும் அதிகமான இந்தியர்கள் 2 வாடகை விமானங்கள் வாயிலாக அழைத்து வரப்பட்டனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய கலாச்சார மையம்  மற்றும் மகாராஷ்டிர மண்டல் என்ற அமைப்பும் ஏற்பாடு செய்த 2 விமானங்களில் 172 பேர் நாக்பூருக்கும்,  165 பேர் மும்பைக்கும்  வந்தனர்.

இந்த விமானங்கள் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டவை அல்ல என்றும் பயணிகள் டிக்கெட்டிற்காக தலா 20 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், தோஹா இந்திய கலாச்சார மைய நிர்வாகிகள் தெரிவித்தனர். 169 பயணிகளுடன் மேலும் ஒரு விமானம் நாளை தோஹாவில் இருந்து கோவாவுக்கு இயக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments