உலகெங்கிலும் ஒரே நாளில் 2,12,000 பேருக்கு வைரஸ் தொற்று-WHO

0 1679

கொரோனா தொற்று பரவத் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கிலும் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வட, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சியவர்கள் தெற்காசிய, கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்த தொற்று எண்ணிக்கை  29  லட்சத்து 35 ஆயிரத்து 982 ஆகவும், பிரேசிலில் 15 லட்சத்து 78 ஆயிரத்து 376 ஆகவும் அதிகரித்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1091 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இதனால் அங்கு இறப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments