விமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா?

0 2331

மின்சாரத்தை பயன்படுத்தி ஜெட் விமானங்களை பறக்க வைக்கும் தொழில்நுட்பம் ஒன்றின் மாதிரி இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

உலகில் அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் வாகனங்களில் ஒன்றாக  விமானங்கள் உள்ளன. மாசை குறைக்க மின்சார கார்கள் உருவாக்கப்படும் நிலையில், மின்சார இயந்திரங்கள் மூலம் விமானங்களை பறக்க வைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடைபெற்றது.

மின்சக்திக்கான அதிக எடை கொண்ட பேட்டரிகளை விமானத்தில் கொண்டு செல்வது கடினம் என்பதால், அதற்கான மாற்று வழி குறித்து ஊகான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக,   மைக்ரோவேவ் ஏர் பிளாஸ்மா (Microwave airplasma)  மூலம்  பறப்பதற்கான மாதிரி இயந்திரத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

அதே நேரம் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள விமானத்தையும், பயணிகளையும் இந்த தொழில்நுட்பத்தால் பறக்க வைப்பது அத்தனை எளிதல்ல எனவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments