டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிப்பதில் படுக்கை பற்றாக்குறை எதுவும் இல்லை-கெஜ்ரிவால்

0 917

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் படுக்கை பற்றாக்குறை எதுவும் இல்லை என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 15000 படுக்கை வசதிகள் உள்ளதில், 5300 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறினார், டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1000 படுக்கை வசதி கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆகியோருடன் பார்வையிட்ட பின் கெஜ்ரிவால் இதை தெரிவித்தார். அதே நேரம் ஐசியு படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் கூறினார். இந்த மருத்துவமனை 11 நாட்களில் டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி சத்தர்பூரில், ராதாசாமி ஆன்மீக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10000 படுக்கை வசதி கொரோனா சிறப்பு மருத்துவமனை இன்று முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments