உ.பி. காவல்துறையினர் கொலை வழக்கில் ரவுடி கைது..!

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் காவல்துறையினர் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளி ஒருவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 60க்கு மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல ரவுடி விகாஷ் துபேயைப் பிடிக்கக் காவல்துறையினர் முப்பது பேர் சென்றனர்.
அப்போது வீட்டின் மாடியில் இருந்து விகாஸ் துபேயும் அவனது கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி, காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள் என 8 பேர் உயிரிழந்தனர். டிஎஸ்பியின் தலையும் கால் விரல்களும் கோடரியால் வெட்டப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்யாண்பூரில் விகாஸ் துபேயின் கூட்டாளியான தயாசங்கர் அக்னிஹோத்ரி என்பவனைக் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
பிடிக்க முயன்றபோது அக்னிஹோத்ரி துப்பாக்கியால் சுட்டதாகவும், காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் அவன் காலில் குண்டுக்காயம் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments