இந்தியாவில் ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா..!

0 2761

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாகக் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவாக 613 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இதுவரை இல்லாத அளவாகக் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 613 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர், குணமடைந்தோர் போக 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து ஏழாயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், தற்போதைய நோயாளிகள் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரம், தமிழகம், டெல்லி ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

ஜூலை 4 வரை மொத்தம் 97 லட்சத்து 89 ஆயிரத்து 66 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 4 அன்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments