2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; எல்லையில் தொடரும் தேடுதல் வேட்டை

0 1133

காஷ்மீரில் இராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் கூட்டு நடவடிக்கையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தின் அர்ரா பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவன் அடையாளம் காணப்பட்ட நிலையில், இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதங்களில் நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments