கொரோனா தொற்றை கண்டறிய புதிய கொரோனா சோதனை கருவிகள்

0 1515

கொரோனா வைரஸ் தொற்றை வேகமாக கண்டறிய உதவும் ஆண்டிஜன் சோதனை கருவிகளின் ஒப்புதலுக்காக, 14 நிறுவனங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை அணுகியுள்ளன.

நோய்த்தொற்றை கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்டி-பிசிஆர் கிட் மூலம் மேற்கொள்ளப்படும், சளி மாதிரிகள் மீதான ஆய்வு முடிவுகள் கிடைப்பதற்கு சுமார் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், குறைந்த நேரத்தில் ஆய்வு முடிவுகளை அளிக்கும் தென்கொரிய நிறுவனத்ததின் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது 7 இந்திய நிறுவனங்கள் உட்பட தென்கொரியா, பெல்ஜியம், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 நிறுவனங்கள், புதிய கருவிகளை வடிவமைத்து ஐ.சி.எம்.ஆரின் ஒப்புதலுக்காக சமர்பித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments