கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா

0 4066

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவின் மகள் குடும்பத்தினர் மதுரை சென்று திரும்பிய நிலையில், அவரது 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர்கள் மூவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments