பிரதமர் மோடி பார்வையிட்ட ராணுவ மருத்துவமனை வசதிகள் -ராணுவம் விளக்கம்..!

0 8190

லடாக்கில் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இதுகுறித்து ராணுவத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி லடாக்கில் ராணுவ மருத்துவமனைக்குச் சென்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து லேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் போதிய வசதிகள் எதுவும் கிடையாது என்றும் மோடியின் திடீர் வருகையால் மருத்துவமனை அவசர அவசரமாக நவீனமயமாக்கப்பட்டதாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “லேயில் பிரதமர் மோடி பார்வையிட்ட ராணுவ மருத்துவமனையின் வசதிகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் தவறான தகவல்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments