கொல்கத்தாவுக்கு 6 நகரங்களில் இருந்து விமானங்கள் செல்லத் தடை

0 1794

கொல்கத்தாவில் நாளை முதல் 19ம் தேதி வரை சென்னை,மும்பை, டெல்லி, உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து பயணிகள் விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர், அகமாதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களின் போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு நாளை முதல் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு கொல்கத்தா விமான நிலையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments