தென் சீனக் கடல் பகுதிக்கு வரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களால் பதற்றம்

0 3211

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் போர்ப் பயிற்சிக்காக அமெரிக்காவின் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே இந்தப் பயிற்சி நடப்பதாகவும், தென் சீனக் கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தாங்கள் எதிர்த்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட பகுதியில் அமெரிக்க கப்பல்களின் வரவால் சீனா, அமெரிக்கா இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments