தந்தையை சைக்கிளில் வைத்து 1,200 கி.மீ ஓட்டி சென்ற ஜோதி கொலை என வதந்தி

0 3767

தந்தையை சைக்கிளில் வைத்து  1,200 கி.மீ  ஓட்டி சென்ற ஜோதிகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலி செய்தி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

கொரோனா லாக்டௌன் காலத்தில் பீகாரை சேர்ந்த 13 வயது சிறுமி ஜோதி குமாரி காயமடைந்த தன் தந்தையை சைக்கிளின் பின் இருக்கையில் அமர வைத்து 1,200 கி.மீ ஓட்டி சென்றார். கிர்கானில் இருந்து பீகாரிலுள்ள தர்பங்பா வரை தந்தையை வைத்து சைக்கிள் ஓட்ட சிறுமிக்கு 7 நாள்கள் பிடித்தது.

ஜோதியின் இந்த செயல் நாடு முழுவதும் பரவி பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய சைக்கிள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ஓம்கார், தேசிய சைக்கிள் அகாடமியில் சிறுமிக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்காவும் , ஜோதி சிங்கின் மனவலிமை குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜோதி சிங் கொல்லப்பட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. #JusticeForJyoti என்ற ஹேஸ்டேக்கும் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. ஆனால், கொல்லப்பட்டது அந்த சிறுமி இல்லை. கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பெயரும் ஜோதி சிங் பாஸ்வான் என்பதால் பெயர் குழப்பத்தால், இந்த செய்தி ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments