இந்திய-சீன எல்லையில் தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்திய விமானப்படை

0 4205

சீனாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. அங்குள்ள இந்திய விமானதளத்தில் சுகோய், SU 30 Mki, மிக்29 உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள் வருவதும் போவதுமாக உள்ளன.

இந்தியா கொள்முதல் செய்துள்ள அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் தயாரிப்பான சரக்கு விமானங்களும் அங்கு அடிக்கடி வந்து செல்கின்றன.படைவீரர்களையும் அவர்களுக்கான சாதனங்களையும் எல்லைக்கு அருகே கொண்டு செல்வதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.

எல்லைப் பகுதி முழுவதும் இருநாட்டு படைகளால் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. இந்திய விமானப்படை அனைத்து வித சவால்களையும் சந்திப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments