"அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது" - அதிபர் டிரம்ப்

0 5760

இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தார்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக அமெரிக்காவும் இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த டிவிட்டர் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மோடியை தமது நண்பர் என்று குறிப்பிட்டு இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments