மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக இபாஸ் பெற அவசியமில்லை - தமிழக அரசு

0 14116

ஜூலை 6-ஆம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட இ பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பணியாளர்கள் புதிதாக இபாஸ் பெற அவசியமில்லை என்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட இ பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இபாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments