ஆம்புலன்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருந்தபோது கொரோனா பாதித்த முதியவர் பலி

0 2201
கொரோனா பாதித்த முதியவர் வீட்டு வாசலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

பெங்களூரில் கொரோனா பாதித்த முதியவர் ஆம்புலன்ஸுக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்தநேரத்தில் மயங்கி விழுந்து இறந்து கிடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

ஹனுமத் நகரை சேர்ந்த 65 வயது முதியவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அரசு  ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வீட்டுக்கு நேராக வந்தால், பக்கத்து வீட்டினர் எதுவும் நினைப்பார்கள் என எண்ணி, அது தொலைவில் வரும்போதே நிறுத்தி ஏற முதியவர் வெளியே வந்துள்ளார்.  ஆனால் நீண்டநேரமாக ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோ பிடிக்க உறவினர்களுடன் செல்ல முயற்சிக்கையில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

இதையடுத்து வீட்டு வாசலில் உள்ள சாலையிலேயே முதியவரின் உடல் 3 மணி நேரம் கிடத்தப்பட்டிருந்தது. அந்த உடலருகே உறவினர்கள் துயரத்துடன் நின்ற வீடியோ வெளியாகி வைரலாகவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments