வார்டுகளுக்கு கால்வன் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயரைச் சூட்ட முடிவு

0 4102
பிரதமர் லேக்குச் சென்று திரும்பிய நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தீர்மானம்

டெல்லி சத்தார்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு கால்வன் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களைச் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சத்தார்பூரில் ராதா சோமி சத்சங்க பியாஸ் வளாகத்தில் பத்தாயிரம் படுக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், மத்திய ஆயுதக் காவல் படையினர், மருத்துவர்கள் இணைந்து இதை நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையின் வார்டுகளுக்கு, கால்வன் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயரைச் சூட்டுவதற்குப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மோடி லேக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து எழுச்சி உரையாற்றித் திரும்பியுள்ள நிலையில் இவ்வாறு முடிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments