சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு 2 வாரங்களுக்கு விமானங்கள் இயக்க தடை

0 2019
வெளிமாநிலங்களில் இருந்து கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து விமானங்கள், கொல்கத்தா வருவதற்கு ஜூலை 6 முதல் 19ம் தேதி வரை 2 வாரங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் தடை செய்யப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 25 முதல்  மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதித்தது. இதையடுத்து உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  பிற மாநிலங்களில் இருந்து மேற்குவங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத் நகரங்களில் இருந்து  விமானங்கள் வர தடை விதிக்க விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு மாநில அரசு கோரிக்கை வைத்தது.

இக்கோரிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த 30ம் தேதி ஏற்றுக் கொண்டது. பிற நகரங்களில் இருந்து வாரம் 1 விமானம் என்ற எண்ணிக்கையில் குறைவாக விமானத்தை இயக்க வைத்த கோரிக்கை குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments