காக்னிசண்ட் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

0 28936
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிவோர் பாதிக்கப்படுவர் என தகவல்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளைகளில் இருந்து காக்னிசண்ட் நிறுவனம், தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தமாக எத்தனை பேர் வேலையிழப்பார்கள் என்பது தெளிவாக தெரியாத நிலையில், பல நூறு பேர் வேலையிழக்கலாம் எனவும், ஊரடங்கால் பணிகளின்றி இருக்கும் 18 ஆயிரம் ஊழியர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், பூனே, கொச்சி, கொல்காத்தா ஆகிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அனைத்திந்திய ஐடி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த காக்னிசண்ட் ஊழியர்கள் 20 பேர் கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கத்திலும், மேலும் 20 பேர் தமிழக சங்கத்திலும் புகாரளித்துள்ளனர். ஆனால் இந்த செய்திகளுக்கு காக்னிசண்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், காக்னிசண்ட் நிறுவனம் இது போன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments