சென்னை பெருநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிப்பு

0 22331

சென்னையில் முழுஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை. கடைகள், ஹோட்டல்கள், தேநீர்க் கடைகளுக்கான நேரம் நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை 19ஆம் தேதிக்கு முன்னர், இருந்த கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 6ஆம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும். .

காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். மால்கள் தவிர்த்து, வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் நகை, ஜவுளி போன்ற பெரிய கடைகள், ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும், ஆனால் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்ற செயல்பாடுகளைப் பொருத்தவரை, 19ஆம் தேதிக்கு முன்னர், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments