10 ஆண்டுகளுக்கு முன், இதே நாள்... சாக்ஷியை கரம் பிடித்த தோனி!

0 7740

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாக்ஷி திருமணம்  நடந்து 10 வருடங்களாகியுள்ளது. கடந்த 2010- ம் ஆண்டு ஜூடில 4- ந் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டன் தோனி எப்போது வேண்டுமானாலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக தோனி விளையாடலாம் . சுமார் 10 வருடங்களுக்கு முன், இந்தியாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலராக தோனி வலம் வந்தார். தோனியை திருமணம் செய்ய பெண்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென்று சாக்ஷியை கரம் பிடித்தார் தோனி. 

இவர்கள் திருமணம் நடந்தது எப்படி? 

யுதாஜித் தத்தா என்பவர் தோனியின் மேலாளராக இருந்தார். இவர், சாக்ஷியின் நண்பரும் கூட. 2007- ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் இந்திய அணி தங்கியிருந்தது. அதே ஹோட்டலில் சாக்ஷி இன்டர்ன்ஷிப் பார்த்து கொண்டிருந்துள்ளார். ஒரு நாள், யுதாஜித் சாக்ஷியிடத்தில் , 'தோனியை சந்திக்கப் போகிறேன்... நீயும் வா' என்று உடன் அழைத்து சென்றுள்ளார். சாக்ஷியை பார்த்தவுடன் தோனியின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்துள்ளது.

கொஞ்ச நாள் கழித்து யுதாஜித் தத்தாவிடத்தில் சாக்ஷியின் செல்போன் நம்பரை தோனி வாங்கியுள்ளார். தோனிதான் எஸ்.எம். எஸ் வழியாக சாக்ஷியை முதலில் புரபொஸ் செய்துள்ளார். 'தோனி எனக்கு மெசேஜ் செய்த நாளை என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது' என்று சாக்ஷி சொல்வது உண்டு. 2008- ம் ஆண்டு முதல் இருவருக்கும் காதல் உருவாகி 2010- ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் ஆதாரமாக 2015- ம் ஆண்டு ஷிவா பிறந்தார்.

திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி தோனி, சாக்ஷி தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments