எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியிட தன்னிடம் பேரம்

0 6701

தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற காவல் நிலைய சம்பவம் குறித்து வீடியோ பதிவிடுமாறு தனக்கு 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக பாடகி சுசித்ரா  தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரம் பற்றி ஆங்கிலத்தில் பேசிய ட்விட்டரில் பாடகி சுசித்ரா வீடியோ வெளியிட்டார். இதன் பிறகே இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்களும் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி ஆட்சியில் இருந்த போது காவல் நிலையங்களில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட தனக்கு 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும், அன்றிலிருந்து தனக்கு தூக்கமே வரவில்லை எனவும் சுசித்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பேசியவர் யார் என்ற விவரத்தை அவர் பதிவு செய்யவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments