காவல் உதவி ஆய்வாளர், பெண் மீது கார் மோதி விட்டு தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி

0 5972

டெல்லியில் அதிவேகமாக வந்த கார், சாலையில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதுடன் அவர் மீது ஏறி இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

டெல்லி சில்லா கிராமம் அருகே கார் மோதி பெண் ஒருவர் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு அருகில் சென்று உதவும் முன்பே கார், அந்த பெண்ணின் மீது ஏறி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் காரை மடக்கிப்பிடித்தனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

இதையடுத்து காரை ஓட்டிச் சென்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் காவல் உதவி ஆய்வாளர் என்பதும் மது போதையில் விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments