செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நீட் தேர்வு

0 1626

வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு கொரோனா பாதிப்பால் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும், கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் நீட், ஜெ.இ.இ ஆகிய தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி நீட் தேர்வுகள் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜூலை 4 முதல் 15 வரை https://ntaneet.nic.in என்ற இணையதளம் மூலம் தங்கள் வசதிக்கேற்ப தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கு 15 நாட்கள் முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments