அரியானா மாநிலம் குருகிராமில் இருந்து 60 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்

0 2151

அரியானா மாநிலம் குருகிராமிற்கு தென் மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டன.

இரவு 7 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 7 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 வினாடிகள் நீண்ட இந்த பூகம்பத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் குறைந்த அதிர்வில் 14 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments