முழு அளவிலான முக கவசத்தை காவல்துறையினர் பயன்படுத்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தல்

0 1574
கொரோனா தொற்றால் காவல்துறையினர் 1250 பேர் பாதிப்பு

சென்னையில் கொரோனாவை தடுக்க முழு அளவிலான முக கவசத்தை காவல்துறையினர் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சிகிச்சை பெறும் பகுதியில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர், சென்னையில் கொரோனா தொற்றால் காவல்துறையினர் 1250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினால், தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதால், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments