'டுவிட்டரில் ’எடிட்டிங்’ ஆப்ஷன் எப்போது கிடைக்கும்?’ - டுவிட்டர் நக்கல் பதில்!

0 3551

டுவிட்டர் பயணாளர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வசதி தான் ’எடிட்டிங்’. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பதிவுகளைப் பதிவிட்ட பிறகு அதில் ஏதாவது தவறு இருப்பின், மீண்டும் திருத்திக்கொள்ளும் எடிட் வசதியை பயணாளர்களுக்குத் தந்திருக்கிறது. ஆனால், பல்வேறு வசதிகளை டுவிட்டர் அறிமுகப்படுத்தினாலும், இந்த எடிட்டிங் வசதியை மட்டும் கொடுக்காமல் இருந்துவருகிறது. தற்போது டுவிட்டரில் ஏதாவது பதிவிடும்போது பிழை கண்டுபிடித்தால், அதை நீக்கிவிட்டு மறுபதிவு தான் செய்ய வேண்டி இருக்கிறது.  

இந்த நிலையில், எடிட் ஆப்சன் குறித்த கேள்விகளுக்கு டுவிட்டர் நிறுவனம், “எப்போது அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிகிறீர்களோ, அப்போது எடிட் ஆப்சன் நிச்சயம் வரும்” என்று நக்கல் அடித்துள்ளது.

கொரோனா நோய் பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு கட்டாயம் மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், இந்த அறிவுரையைப் பலர் கேட்பதில்லை. முகக்கவசம் இல்லாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, ’கொரோனா எவ்வளவு தீவிரம் அடைந்தாலும் அனைவரும் மாஸ்க் அணியப்போவதில்லை. அதே போல உங்களுக்கு எடிட் வசதி கிடைப்பதும் நடக்காது ஒன்று” என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளது டுவிட்டர்!

டுவிட்டரில் பதிவிடும் பதிவுகளை எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தினால், பதிவிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்று டுவிட்டர் நிர்வாகம் கருதுகிறது. அதனால் தான் பல்வேறு வசதிகளை டுவிட்டரில் அறிமுகப்படுத்தினாலும் இந்த எடிட்டிங் வசதியை மட்டும் கொடுக்க அடம்பிடிக்கிறது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments