திருப்பதி கோவிலில் அர்ச்சகர், விஜிலென்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

0 7366

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர், விஜிலென்ஸ் ஊழியர்கள்உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று கோவில் ஊழியர்களிலும் தினமும் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகக் கூறிய அவர் கடந்த சில தினங்களில் 400 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பக்தர்களில் ஒருவருக்குக் கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார். இதனிடையே திருமலைக்கு ஒருமுறை பணிக்கு வரும் ஊழியர்கள் அடுத்த 7 நாட்கள் வரை கீழே இறங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments