மத்திய அரசு வழங்கிய பாதுகாப்பு கவசங்கள்..!

0 1321

கடந்த 3 மாதங்களில், 2 கோடிக்கும் அதிகமான என்-95 மாஸ்குகள், ஒரு கோடியே 18 லட்சம் PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை  மத்திய அரசு, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய சுகாதார அமைப்புகளுக்கும் இலவசமாக வழங்கி உள்ளது.

இந்த தகவலை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், இந்த காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 11 ஆயிரத்து 300 வென்டிலேட்டர்களை மாநிலங்களுக்கு வழங்கியதில்,  6154 வென்டிலேட்டர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் ஐசியூக்களில் வென்டிலேட்டர் பற்றாக்குறை குறைந்துள்ளது. இது தவிர ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் சிலிண்டர்களும் இந்த காலகட்டத்தில் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments