நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி..!

0 6000

தனது அலுவலக பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக நடிகர் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவன ஊழியர்களின் டி.டி.எஸ் தொகையை வரித்துறைக்கு செலுத்தியதாக போலி ஆவணம் தயாரித்தும், போலி வங்கி பரிவர்த்தனை ஆவணம் தயாரித்தும் ஏமாற்றி சுமார் 45 லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து மோசடி செய்துள்ளதாக விஷாலின் கணக்காளர் ரம்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரம்யாவையும் அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் டி.டி.எஸ் தொகை சுமார் 4 கோடி ரூபாயை வரித்துறைக்கு செலுத்தாமல் மோசடி செய்தது தொடர்பாக விஷால் மீதான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments