சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இதுவரை 19 பேருக்கு கொரோனா

0 912

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 உயரதிகாரிகள் உள்ளிட்ட 19 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பணமோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஹவாலா பரிமாற்றம் உள்ளிட்ட மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு அமலாக்கத்துறை.

சென்னையில் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. கிரீம்ஸ் சாலை பகுதியில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதியில் இயங்கி வரும் அமலாக்கத்துறை அலுவலகத்திலும் பரவியுள்ளது. அலுவலக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் 5 பேர் என இதுவரை 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து, தூய்மை செய்த பிறகு, ஒரு பக்கம் வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யும் பணி தொடர்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments