19ந் தேதி இரவு ஜெயராஜை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்-வழக்கறிஞர் வாக்குமூலம்

0 7393

சாத்தான்குளம் போலீசார், கடந்த 19ந் தேதி இரவு ஜெயராஜை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்ததாக வழக்கறிஞர் கார்த்தீசன் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவம் நடந்த ஜூன் 19ஆம் தேதியன்று, வேறொரு வழக்கிற்காக, சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற வழக்கறிஞர்களான கார்த்தீசன் மற்றும் அலெக்சாண்டரிடம், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

சம்பவ நாளில் வேறு ஒரு வழக்கிற்காக காவல் நிலையம் சென்றிருந்தபோது, போலீசார் ஜெயராஜை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்ததாகவும், ஜெயராஜை போலீசார் அடித்ததை தடுத்த தன்னை கீழே தள்ளிவிட்டுச் சென்றதாகவும் வழக்கறிஞர் கார்த்தீசன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட போது அங்கு இருந்த அலெக்சாண்டர் எனும் வழக்கறிஞரும், நீதிபதி பாரதிதாசனிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments