கொரோனா தடுப்பு பணி-ரூ.44.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 896

கொரோனா நோயாளிகள் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உணவு வழங்க 44 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர மாதம் தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 44 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் உணவுக்காக  1 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு 40 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினருக்கு 2 கோடியே 38 லட்ச ரூபாய் என மொத்தம் 44 கோடியே 34 லட்சத்து 12 ஆயிரத்து 98 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments